வசீகரா, பகவதி, போக்கிரி, சச்சின், சுறா, காவலன் உள்ளிட்ட படங்களில் விஜய்-வடிவேலு இணைந்த நகைச்சுவை பகுதிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இம்சை அரசன் 23 ம் புலிகேசி படத்தை தொடர்ந்து வடிவேலு வுக்கும் கதாநாயகன் ஆசை வந்து விட இந்திரலோகத்தில் நா அழகப்பன்.தெனாலிராமன் படங்களை தொடர்ந்து பிற நடிகர்களின் படங்களில் காமெடி கேரக்டரில் நடிப்பதை தவிர்த்து வந்தவர் தற்போது எலி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. விஜய் புலி படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் புலி படம் முடிந்ததும் விஜய் அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப் படத்தில் மீண்டும் விஜயுடன் இணைந்து காமெடியில் கலக்க ப்போகிறவர் வடிவேலுதானாம். மீண்டும் எலியும் புலியும் புதிய படத்திற்காக இணைய வுள்ளது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.