நடிகர் மாதவன் ‘இறுதிச்சுற்று’ படத்திற்கு பிறகு ‘விக்ரம் வேதா’ படங்கள் போன்று தனக்கு ஏற்ற கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.இதையடுத்து கவுதம் மேனனின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’ படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் தோள் பட்டையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மாதவனுக்கு ஆபரேஷன் நடந்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அவர் தன்னுடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஷேர் செய்துள்ளார்.மாதவனின் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மாதவனுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. ஆபரேஷனுக்கு பிறகு வலது கை இருப்பதையே உணர முடியவில்லை எனக் கூறியுள்ளார் மாதவன். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.