என்னை அறிந்தால் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் கௌதம் மேனன்சிம்பு நடிப்பில் இயக்கி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார்.
விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு சிம்பு.ஏ ஆர்,, ரகுமான், கௌதம் மேனன் இணையும் இந்த படத்தின் மேல் உள்ள எதிர்பாப்பு மிக அதிகம்.
தற்போது கௌதம் மேனன் இந்தப் படத்தின் தலைப்பை அறிவித்து உள்ளார்.’அச்சம் என்பது மடமையடா’ என பெயரிடப் பட்டு உள்ள இந்த தலைப்பே படத்தின் கதைக்கேற்ப தலைப்பு என அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே மூன்று பாடல்கள் பதிவாகி உள்ள நிலையில் , ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளது.