//////////////////////////////////////
‘வம்சம்’ ‘மௌனகுரு’, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’ உட்படசில படங்களில் கதாநாயகனாக நடித் அருள்நிதி, தொடர்ந்து,,‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’, ‘டிமான்டி காலனி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ! இந்நிலையில் அருள்நிதிக்கு நேற்று மாலை சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அருள்நிதி க்கு மனைவியாக போகிறவரின் பெயர் கீர்த்தனா. இவர் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மகள் என்கிறார்கள்.! நேற்று நடந்த இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் இரு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்! விரைவில் அருள்நிதியின் திருமணத் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இது காதல் மற்றும் கலப்பு திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.