அறிவழகனின் இயக்கத்தில் வெளியான ‘ஈரம்’ படத்தில் எடிட்டராகப் பணியாற்றிவர் கிஷோர். அதோடு ஆனந்தபுரத்து வீடு, ஆடுகளம், எங்கேயும் எப்போதும், எதிர்நீச்சல் உட்பட பல படங்களில் எடிட்டராகவும் பணியாற்றயிருக்கிறார். ‘ஆடுகளம்’ படத்திற்காக சிறந்த எடிட்டருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.. தற்போது வெற்றிமாறன் இயக்கிவரும் ‘விசாரணை’ என்ற படத்தில் எடிட்டராகப் பணியாற்றி வருகிறார்.இவர்,
கடந்த வாரம் ‘விசாரணை’படப்பிடிப்புத்தளத்தில் இருந்த எடிட்டர் கிஷோர் திடீரெனமயங்கி விழுந்ததால், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர் படக்குழுவினர். கிஷோரை தீவிரமாக பரிசோதித்த டாக்டர்கள் அவரின் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாகவே அவர் மயங்கி விழுந்ததாகத் தெரிவித்தார்கள். அதோடு அறுவைச் சிகிச்சை மூலம் அந்த அடைப்பும் சரிசெய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும்கூட தற்போது வரை எடிட்டர் கிஷோர் கண்விழிக்காமல் மயக்க நிலையிலேயே இருப்பதால் மீண்டும் மருத்துவர்கள் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யவுள்ளனாராம்.
தொடர்ந்துதீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்துவரும் எடிட்டர் கிஷோர் விரைவில் நினைவு திரும்பி, மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பவேண்டும் என்பதே திரையுலகினரின் பிரார்த்தனை