ஊரே கூடி ‘ இருக்கா, இல்லியா ‘ என்கிற விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த காலத்தில் ‘எரிந்த கட்சி, எரியாத கட்சி’ என்று காமன் பண்டிகையை இரு அணியாக பிரிந்து லாவணி பாடுவார்கள். மதுரையில் சண்டை கூட வந்து விடும்! எல்லாம் சாராயம்தான்!
அதைப்போல சினிமாவில் பாலியல் வன்புணர்வு இருக்கா, இல்லியா என்பது பற்றி இருவகையான வாதங்கள்!
மனசாட்சி உள்ளவர்கள் உண்மை பேசுவதில்லை. அது பலரை சுடும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
துணிவுள்ள நடிகைகள் சிலர் ‘வன்புணர்வு’ இருப்பதாகவே சொல்கிறார்கள்.
அதில் ஒருவர் ஷிவானி சிங். தெலுங்கில் பிரபலம்.
“இந்த இண்டஸ்ட்ரியில் ‘அது’ இருக்கவே செய்கிறது.உடம்பில் பலம் மட்டும் இல்லாமல் தைரியமும் இருந்தால் நடிகைகள் பக்கமாக ஒரு ஆள் நெருங்க மாட்டான்.! வேடிக்கையாக பேசுகிறேன் என்று சில வழிவார்கள் அவர்களை நெருங்க விடமாட்டேன்.இதனால் பெட்ரூம் ஆசையுடன் யாரும் வருவதில்லை. எப்பவும் என் கைப் பையில் ஒரு கத்தி இருக்கும். இன்னும் சில அயிட்டங்களும் இருக்கிறது.நிர்பயா படுகொலைக்குப் பிறகுதான் இந்த எச்சரிக்கை” என்கிறார் ஷிவானி.