கடல் அலையில் கரையில் ஒருநாளும் முத்துகள் ஒதுங்குவதில்லை. வெறும் சிப்பிகள் மட்டுமே ஒதுங்கும்.அதைப்போல தேனாண்டாள் தயாரிப்பில் சுந்தர். சி,இணைந்து இயக்கும் ‘சங்கமித்ரா‘ படத்தைப் பற்றி தேவையற்ற வதந்திகள்.கைவிடப்பட்டதாகவே எழுதப்பட்டன.
400 கோடி ரூபாய் பட்ஜெட் படம்.எட்டாவது நூற்றாண்டு சம்பவங்கள் ,பாகுபலி மாதிரி பிரமாண்டம் காட்டவேண்டும்.அதுவும் இரண்டு பாகம் வரும் என்கிறார்கள். இதற்காகவே பத்ரி தலைமையில் கதை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது
ஹைதராபாத்தில் பிரமாண்டமான அரங்குகள்.பாகுபலியை மிஞ்ச வேண்டும் என்பது சுந்தர்.சி.யின் திட்டம். ஜெயம் ரவி, ஆர்யா, இருவரும் முக்கிய வேடங்களில்.
இளவரசியாக நடிப்பதற்கு தேவையான வாள் பயிற்சிகளை தற்போது திஷா பதானி கற்றுக்கொண்டு வருகிறார்.
“எப்போதும்மா வாள் வீசப் போகிறாய்?”
“ஜூலை மாதம்.! ஒரு வருஷம் கால்ஷீட் ! டைட் ஷெட்யூல் .தமிழ் ,தெலுங்கு ,இந்தி என மும்மொழி. கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு. குஷ்பூ மேம் வாழ்த்து சொல்லி இருக்காங்க.” என்கிறார் திஷானி.