அட்டகத்தி’ ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படங்களின் மூலம் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.தொடர்ந்து பட வாய்ப்புகள் சரி வர அமையாததால் 2 வருடங்களுக்கு முன்பு நடிகர் தனுசும் ,இயக்குனர் வெற்றிமாறனும் இணைந்து தயாரித்த ‘காக்கா முட்டை’ என்ற படத்தில் 30 வயதான சேரி ப்பெண்ணாக நடிக்க ஒப்புக்கொண்டாராம். இப்படத்தின் கேரக்டருக்காக உடல் குண்டாகவும், கறுப்பாகவும் பெண்ணாக தன்னை மாற்றிக்கொண்டு நடித்திருந்தார்.இந்நிலையில், தற்போது ‘இடம் பொருள் ஏவல்’, ‘குற்றமும் தண்டனையும்’, ‘தீபாவளி துப்பாக்கி’ உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் தற்போது ‘காக்கா முட்டை’ படத்தை வெளியிட ஏற்பாடுகள் தற்போது நடப்பதால், ‘காக்கா முட்டை’ வெளிவந்தால், தன் கலர் அழகு பற்றி கேள்வி எழுமே என்றும் மேலும் , தன்னுடைய இமேஜ் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற கவலையிலும் உள்ளாராம் ஐஸ்வர்யா ராஜேஸ் .