உலகத் தமிழர்களின் அன்பினை பெற்றிருக்கும் வீரத்தமிழன் மாவீரன் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாகிறது என்பது மகிழ்ச்சியான செய்திதான்! ஸ்டுடியோ எயிட்டீன் என்கிற நிறுவனம் ஜி.வெங்கடேஷ் என்பவரின் இயக்கத்தில் எடுக்கப்போவதாக சொல்கிறார்கள். மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் வரலாற்றுப் பிழைகள் இல்லாமல் எடுக்கப்படவேண்டும் என்பதே விருப்பம். அச்சு ஊடகங்கள் ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கு இசைந்து செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் தவறான கருத்து இன்னமும் இருக்கிறது. பெரும் செலவில் எடுக்கப்படவேண்டிய வரலாறை செலவினம் கருதி குறுக்கிவிடக்கூடாது என்பதே தமிழர்களின் விருப்பம்.