பெட்ரோல் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டு போவது போல் திரை உலக ‘கேஸ்டிங் கவுச்’ சமாச்சாரங்களும் வெளியேறிக் கொண்டிருக்கின்றன. டிவிட்டர் இணையத்தில் ‘மீ டூ’ ஹாஸ்டாக் கிலும் பதிவுகள் ஏறுமுகமாகவே இருக்கிறது.
‘செட் லைட் எரியணும்னா என் வீட்டு பெட்ரூம் லைட் அணையனும்’ என்று சினிமாவில் சிலர் சொல்வார்கள் என்பதாக ஓர் அழுக்கு பழமொழி உண்டு.
ஆனால் அந்த அழுக்குப் பழமொழி உண்மைதான் என்பதாக சூடு வாங்கிய சில நடிகைகள் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். ஒரு தொலைக்காட்சி இது தொடர்பாக ஒரு ‘ஸ்டிங் ஆபரேஷன் ‘ நடத்துவதற்கு ஒரு நடிகையிடம் பேசி இருக்கிறது.
“ஹீரோவின் தம்பியும் ,தயாரிப்பாளரின் மகனும் தன்னை படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி கேட்டார்கள்” என்பதாக அந்த நடிகை சொல்லியிருக்கிறார்.நல்ல வேளை இது நடப்பது ஆந்திராவில்.!