தமிழ், தெலுங்கு ஆகிதமிழ்ப்படங்..களில் நடிக்க வரும் நாகார்ஜுனா வின் வாரிசுகள்!ய இரண்டு மொழிகளில் வெளியான ‘கார்த்திகேயா’படத்தை இயக்கிய சான் டிமாண்டி ,மீண்டும் தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் ஒரு படத்தை இயக்கவுள்ளரர்.இப் படத்தின் மூலம் தெலுங்குப் படவுலகின் முன்னணி இளம் நாயகன் நாக சைதன்யா தமிழில் அறிமுகமாகிறார் .சமீபத்தில் இயக்குனர் சான் டிமாண்டி சொன்ன ஒரு வரி கதையைக் கேட்டு இம்ப்ரஸ் ஆன நாகசைதன்யா, உடனடியாக நடிக்க சம்மதித்த தாகவும் கூறப்படுகிறது.தந்தை-மகன் உறவு குறித்த இந்த படம் செண்டிமெண்ட் கலந்த த்ரில் படமாக இருக்கலாம் என்கிறார்கள்.. நாக சைதன்யா சென்னையில் வளர்ந்தவர் என்பதால் தமிழ் பேசுவதில் எவ்வித சிரமும் இருக்காது என்றும், நாக சைதன்யாவுக்கு தந்தையாக நடிக்க பிரபல நடிகர் ஒருவரை தேர்வு செய்ய இருப்பதாகவும் படக்குழுவினர் கூறியுள்ளனர். அதே சமயம், அமலா – நாகார்ஜுனாவின் மகன் அகில் படம் பற்றி பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்தாலும், எதுவும் இன்னும் உறுதி செய்யப்படாமலேயே இருக்கிறது. முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விநாயக் இயக்கத்தில் தமிழில் அகில் அறிமுகமாக உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.