காவிரி மேலாண்மை வாரியம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இரண்டும் தமிழர்களின் தலை கேட்கும் பலி பீடமாகி இருக்கிறது. நம்மை ஆளுகிற இரண்டு அரசுகளுமே மக்களை எப்படி ஏமாற்றி மொட்டை அடிக்கலாம் என்பதிலேயே குறியாக இருக்கின்றன.
திரைத் துறையினர் ஒட்டு மொத்தமாக அவர்களின் தொழிலை முடக்கி விட்டார்கள்.அவர்களின் வலி அவர்களுக்கு! சுகப்பிரசவமா, ஆயுதக் கேசா என்பது தெரியாமல் மூச்சு பிரச்னை!
இதற்கிடையில் நடிகர்கள் தனித்தனியாக சென்று ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். சரத்குமார் சென்று கலங்கலான தண்ணீரைக் குடித்து விட்டு வந்திருக்கிறார். கமல்ஹாசன் அவரது கட்சி சார்பில் சென்று விட்டு வந்து விட்டார். ரஜினிக்கு இதில் மேலே இருப்பவன் என்ன சொல்வானோ தெரியவில்லை.
நடிகர் அபி சரவணன் ‘ஜாயின்ட் கேர் டீம் ‘ செல்வம்,ராமசாமி, கணேஷ், மலைராஜா ஆகியோருடன் பிரட் ,பிஸ்கட்,பழங்கள், வாட்டர் பாக்கெட் வாங்கிக் கொடுத்து விட்டு தைரியம் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.ஸ்டெர்லைட் ஆலை இருக்கும் பகுதி பக்கம் நெருங்கவே முடியவில்லை, கண்ணெரிச்சல், தொண்டைக் கமறல் எல்லாம் அனுபவித்தோம் என்பதை அபி சரவணன் சொன்னபோது மக்களின் வாழ்க்கை எவ்வளவு ஆபத்தில் இருக்கிறது என்பதை உணர முடிகிறது.
பிரபா என்கிற நடிகரும் சென்னை மாணவர்களுடன் அந்த நச்சு ஆலைக்கான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.
இப்படி தனித்தனியாக போராடுகிறவர்கள் தங்களது வழக்கமான உண்ணாவிரதத்தை எப்போது தொடங்குவார்கள்?
கமல், ரஜினி கலந்து கொள்வார்களா?
கேட்டுச்சொல்லுங்கப்பா!