ரெட் கார்பெட் பட நிறுவனத்தின் சார்பாக எம். நடராஜன், என். ரமேஷ் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் ‘நகர்வலம்’ எனும் திரைப்படத்தில், கதை நாயகனாக ‘காதல் சொல்ல வந்தேன்’ பாலாஜி, புதுமுக நாயகி
தீக் ஷிதா, பாலா , யோகி பாபு , ‘நமோ’ நாராயணன் ‘வேட்டை ‘முத்துக்குமார், இயக்குனர் மாரிமுத்து, ரிந்து ரவி , ‘அட்டக்கத்தி’ வேலு , ‘மதுபானக்கடை’ ரவி ஆகியோருடன் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர்.இப்படத்தில் நடிகர் பசுபதி ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்பாடலின் படபிடிப்பு தற்போது சென்னையில் உள்ள கண்ணகி நகரில் நடந்து வருகிறது,படத்தின் இயக்குனர் மார்க்ஸ், இத்திரைப்படத்தை பற்றி , ” சென்னை நகரில், குடிநீர் விநியோகிக்கும் மெட்ரோ வாட்டர் லாரி டிரைவரான நாயகன் , பல எரியாகளுக்கு குடிநீர் விட செல்லுகையில் , ஓர் ஏரியாவின் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் உண்டாகும் காதலும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளும்தான் கதை. அதனை சென்னை மக்களின் வாழ்வியலுடன் கலந்து யதார்தமாகவும், சுவாரஸ்யமாகவும் திரைகதை அமைக்கப்பட்டு, படமாக்கப்பட்டுள்ளது ” என்றார் .மேலும், இதில் சென்னை பூர்விக மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கானா பாடலை நீண்ட நாட்களுக்கு பிறகு, ‘கானா புகழ்’ இசையமைப்பாளர் தேவா அவர்கள் பாடியுள்ளார். தொழிற்நுட்ப கலைஞர்களாக: ஒளிப்பதிவு: தமிழ் தென்றல்,இசை :பவன் ,சென்னை நகரின் நெருக்கடி மிகுந்த பகுதிகளான அண்ணா நகர், சைதாபேட்டை, கே. கே. நகர், கண்ணகி நகர் ஹௌசிங்க் போர்டு ஏரியா போன்ற இடங்களில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகின்றது