ஆலகால விஷத்தை உண்டு அதை தொண்டையில் நிறுத்திய சிவனை விட தற்காலத் தமிழர்கள் பெரிய ஆள்! விஷத்தையே ஜீரணித்து விடும் ஆற்றல் எமக்கு உண்டு!
எந்த எழுத்தை உச்சரிக்கிறார் என்பது புரியாமலேயே கண்டசாலாவின் பாடல்களை ‘ரசித்த’மாவீரர்கள்! பர்ஹான் அக்தர் பாடுவதையா ரசிக்க மறுப்போம்?
தேவிஸ்ரீ பிரசாத் இசை என்றால் கைகள் தாளமிட்டு கால்கள் நடனமாட தொடங்கிவிடுமே!சொல்லுங்க டிஎஸ்பி சார்?
“பர்ஹான் அக்தர் பெரிய இசை அமைப்பாளர்,தயாரிப்பாளர், நடிகர் இப்படி பன்முகம் உள்ளவர். அவரை தெலுங்கில் பாட வைத்தால் என்ன? இப்படி ஓர் ஆசை அடியேனுக்கு இருந்தது?”
“அது தப்பில்லையே டிஎஸ்பி.சார்?”
“தெலுங்கு பாட்டு பாடணுமேன்னு அவர்கிட்ட கேட்டேன்.?”
“சுத்தமா தமிழும் தெலுங்கும் தெரியாது.எப்படி பாட முடியும்?”
அதை நான் பார்த்துக்கிறேன். உங்க குரலுக்கு தகுந்த மாதிரி பாட்டுக்கு நான் பொறுப்பு.”
“அப்பா சரி” என்று தலையாட்டி விட்டார் பர்ஹான்.
மகேஷ்பாபுவின் ‘பாரத் அனே நேனே’என்கிற படத்தில் அவர் பாடிய ‘ஐ டோன்ட் நோ’ பாட்டு இன்று சூப்பர் ஹிட்.