பாண்டிய நாடு படத்தை தொடர்ந்து விஷாலும் சுசீந்திரனும் மீண்டும் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பை இன்று பூஜையுடன் தொடங்கினர். சென்னை சேத்துப்பட்டில் இருக்கும் ஒரு வீட்டில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது..இந்த தொடக்க விழாவில், நடிகர்கள் விஷால், ஆனந்தராஜ், ஆர்.கே., பாலிவுட் நடிகர் முரளி சர்மா, இயக்குனர் சுசீந்திரன், வேந்தர் மூவிஸ் மதன், டி.சிவா, ஆர்ட் டைரக்டர் ராஜீவன், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அப்போது விஷால் கூறும்போது, “இப்படம் எல்லோருக்கும் ஒரு சிறப்பு வாய்ந்ததாக அமையும் என நம்புகிறேன். பாண்டிய நாடு தந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்ற பொறுப்பு நிறைய ஏற்பட்டிருக்கிறது. இப்படத்தில் புதியவராக வேல்ராஜ் இணைந்துள்ளார்,” என்றார்.இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷால் போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார்.