ரசிகர்களின் ஆதரவு நடிக, நடிகையருக்கு அவசியம்தான்! நாலு பேருடன் நடிப்பவள்தானே என்கிற எண்ணம் தலை தூக்கினால் அவன் ரசிகனாக இருக்க முடியாது.
மான் வேட்டை ஆடிய வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு விவரம் அறிவதற்காக குற்றவாளிகளில் ஒருவராக இருந்து விடுவிக்கப்பட்ட நடிகை தபு இன்று காலை ஜோத்பூர் நீதிமன்றம் வரவேண்டியதாகி விட்டது.அதற்காக காலையில் ஜோத்பூர் விமான நிலையம் வந்து இறங்கிய தபு நடந்து வந்தார். அப்போது கட்டுக்காவலையும் மீறி ஒரு ரசிகன் தபுவிடம் ஆபாசமாக நடந்து கொண்டான்.
அவனை பவுன்சர்கள் செமையாக கவனித்து அனுப்பி இருக்கிறார்கள்.
அவன் மீது மான நட்ட வழக்குப் போடுவதாக இருந்த தபு பின்னர் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.போலீசார் வழக்குப் பதிவு செய்ததாகவும் தெரியவில்லை.
வரவர பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.