ஆந்திர திரை உலகத்தினரின் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறார் அந்த மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு!
பாஜகவின் தொடர்பினை துண்டித்துக் கொண்ட பின்னர் தலைநகர் டில்லிக்கு சென்றவர் பாராளுமன்ற வாசலை தொட்டு வணங்கி விட்டு உள்ளே சென்றிருக்கிறார். இதை கிண்டல் பண்ணி ‘மிகப்பெரிய நடிகராகிவிட்டார் ‘என்று ஊடகங்களும் நக்கல் பண்ணுகின்றன. தமிழ் நாட்டில் தரையைத் தொட்டு, காரின் டயரைத் தொட்டு , இடுப்பு வளைந்து ,இன்னும் எத்தனை கோணங்கள் உண்டோ அத்தனையிலும் தேர்ச்சி பெற்ற முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களை விட சிறந்த நடிகர்கள் ஹாலிவுட்டிலும் கிடையாது.