“ரஜினி,கமல்,விஷால் அரசியலுக்கு வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
எந்த நடிகர்கள் எந்த ஊருக்குப் போனாலும் அவர்களிடம் கேட்கும் முதல் கேள்வியாக இதுதான் இருக்கும்? லிப்லாக்,கேஸ்டிங் கவுச் இவை மாதிரியான கேள்விகளை பின்னுக்குத் தள்ளி விடுவார்கள்.
கார்த்தியிடம் மட்டும் புதிதாக கேட்க முடியுமா?டிரண்டிங் நியூசே அரசியல் அக்கப்போர்தானே?
வழக்கம்போல சிரித்தபடியே பதில் சொல்கிறார் கார்த்தி.
“முதலில் வரட்டும். அதுக்கப்புறம் பார்ப்போம்.அதுக்குத்தானே எல்லோருமே வெயிட் பண்ணிட்டிருக்கோம்! வர்றவங்க தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்வாங்க என்பதை பார்க்கனும்ல! லெஜண்ட்ஸ் பணம் சம்பாதிக்கனும்கிறதுக்காக அரசியலுக்கு வரமாட்டாங்க,! ரஜினி சார் ,கமல் அண்ணா இருவரும் தமிழ்நாட்டை விட்டு ஓடிப் போறவங்க இல்ல.கமல் அண்ணா எங்கப்பாவிடம் நிறைய கத்துக்கிட்டவர்.”
ஆர்.கே.நகர் தேர்தலில் விஷால் போட்டியிட முடியாமல் போயிருச்சி. டிபாசிட்டா கட்டிய பணத்தை வாங்கல.அவர் துணிச்சலானவர். எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்” என்கிறார் கார்த்தி.