சர்ச்சைக்குரிய நடிகை என்கிற பெயரை காசு இல்லாமல் வாங்கி இருக்கிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி.
அண்மையில் ஒருவரின் பெயரை கிசு கிசு பாணியில் குறிப்பிட்டு செக்ஸ் குற்றம் சாட்டி இருந்தார். அந்த தயாரிப்பாளரும் கடுமையுடன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
” இம்மாதிரி இனியும் நடந்தால், பேஸ்புக்,வாட்ஸ் அப்பில் எழுதினால் சும்மா விடமாட்டேன். நீதிமன்றத்துக்கு இழுப்பேன் ” என மிரட்டவே அவரைப் பற்றி எழுதவில்லை.ஆனால் ஆந்திர சினிமாவில் இளம் நடிகைகள் படஉலகில் வாய்ப்புக்காக உடலை கொடுக்க வேண்டியதாக இருக்கிறது” என்று பதிவிட்டிருந்தார்.
இன்று நடுப்பகல் ஆந்திர பிலிம் சேம்பர் பக்கம் வந்த அவர் டைட்சை கழற்றி ரோட்டில் வீசி விட்டு டாப்சையும் கழற்றி எறிந்தார். அப்படியே அரை நிர்வாணமாக உட்கார்ந்தார்.
“தனக்கு இன்னும் உறுப்பினர் அட்டையை கொடுக்காமல் வாய்ப்புகளை தடுக்கிறார்கள்”என்பதாக குற்றம் சாட்டியவரை சற்று நேரத்தில் போலீஸ் வந்து அள்ளிச்சென்றது.
தெலுங்கான முதல்வர் கேசிஆர்க்கும் எச்சரிக்கை.
இந்த பிரச்னையை தீர்க்காவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்பதாகவும் அறிவித்திருக்கிறார்.