காவிரி,ஸ்டெர்லைட் பிரச்னைக்காக தமிழ்நாடே எரிமலையாக குமுறிக் கொண்டிருக்கிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் திரை உலகை சேர்ந்தவர்கள் வள்ளுவர் கோட்டம் அருகில் ஒன்று கூடி அறவழி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.காலை 9 மணிக்கு தொடங்கி பகல் ஒரு மணிக்கு போலீஸ் உத்திரவுப்படி கலைகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும் .தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் இன்று அதிரடியாக போர்க்களத்தில் இறங்கிவிட்டார்கள். நாகையில் கடலில் இறங்கி போராடத் தொடங்கினர்.போலீசார் தடுக்க முயன்றார்கள். ஆனால் இயக்கத்தினர் கடலுக்குள் செல்லவே போலீசாரால் தடுக்கமுடியவில்லை. யாராவது ஒருவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் கொதித்து எழுந்துவிடுவார்கள் என்பதால் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.ஆனால் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தி விட்டுத்தான் கடலை விட்டு வெளியே வந்திருக்கிறார்கள்.