காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டமும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காவிரிக்காக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ந் இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடிகர்-நடிகைகள்உள்ளிட்ட ஒட்டுமொத்த திரையுலகினரும் இன்று சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே மவுன அறவழி போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.இன்று காலை 9 மணியளவில்திரையுலகினரின் மவுன போராட்டம் தொடங்கியது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர்,கலைப்புலி தாணு, நடிகர்கள் விஜய், சிவகுமார் மற்றும் சிவகார்த்திகேயன், ராஜேஷ், சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் நடிகர் கார்த்தி உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.