குரங்கணி காட்டுத்தீயை விட தமிழ்நாட்டில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான போராட்டம் கடுமையாகி வருகிறது.காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், ஸ்டெர்லைட் ஆலை மூடல் ஆகிய பிரச்னைகள் தொடர்பாக ஒட்டு மொத்த தமிழகமே கொந்தளிப்பில் இருக்கிறது. முக்கிய எதிர்க்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நடைப்பயணம் தொடங்கி இருக்கிறது. இப்படி தமிழகமே கலவரபூமியாக இருக்கிற நிலையில் கல்லா கட்டுவேன் என்கிற மனப்பான்மையுடன் சென்னையில் கிரிக்கெட் போட்டி நாளை ( பத்தாம் தேதி) நடக்கப்போகிறது.இதற்காக கிரிக்கெட் விளையாட்டுக் காரர்கள் சென்னையில் உல்லாச ஹோட்டலில் தங்கி இருக்கிறார்கள்.
“நாங்கள் கிரிக்கெட்டுக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் கலாட்டா நடக்கிற இடத்தில் கல்யாணத்தை நடத்தியே தீருவோம் என்கிற மாதிரி ஐ.பி.எல் நடக்குமேயானால் இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் இயக்குநர்கள் அமீர்.சேரன்,தங்கர்பச்சான் உள்ளிட்டோர் முற்றுகை போராட்டம் நடத்துவார்கள்” என்பதாக இயக்குநர் வ.கவுதமன் தெரிவித்திருக்கிறார்.
இதனால் பாரதிராஜா உள்ளிட்ட தமிழ் இயக்குநர்கள் முன்னதாகவே கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது.