விஜய், தனுஷ், சிம்பு உள்ளிட்ட நடிகர்களைத் தொடர்ந்து,நடிகர் சூர்யா இன்று காலை [இணையதள] ட்விட்டரில் சேர்ந்தார். அவர் ‘ ட்வீட்’ செய்த 5 மணிநேரத்தில் 36.4 ஆயிரம் பேர் சூர்யாவை பின்தொடர்ந்துள்ளனர்.முன்னதாக சூர்யா ட்விட்டரில் சேர உள்ளதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அவரை வரவேற்று ட்வீட் போட்டு வருகிறார்கள். ட்விட்டரில் சேர்ந்த சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது, லவ் யூ ஆல். மகளிர் தின வாழ்த்துக்கள். ரொம்ப நாளா வரணும் என்று நினைத்தேன் இன்று வந்தாச்சு. இன்று எதுக்கு என்று கேட்டால் நான் நினைத்ததை விட நீங்கள் அதிகமாக அன்புகாட்டுவதால் தான். என்னுடைய ட்விட்டர் ஐடி @Suriya_offl. நன்றி .இவ்வாறு அவர் கூறியுள்ளார்.