அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனெல்லாம் ஒருநாள் தமிழ்நாடு வந்து டூர் அடித்தால் போதும் அடிக்கிற அரசியல்– அனலில் கருகிப் போவார்கள். ‘வேளாண்மை நாசமாகிப் போச்சே ”குடிக்க தண்ணி இல்லயே’ என தமிழ்நாட்டு மக்கள் விடும் வெப்ப மூச்சும், வெயிலின் கடுமையும் அவர்களை விரட்டிவிடும்.
கமல் கட்சியை ஆரம்பித்து விட்டார்.ரஜினி எலக்சன் தேதிக்காக வெயிட்டிங்.இந்த இருவரையும் ம.தி.மு.க.தலைவர் வறுத்து எடுத்து விட்டார்.
“சந்திர மண்டலத்தில் குடியிருந்தாரா,இன்னொருத்தர் என்ன செவ்வாய்கிரகத்திலா இருந்தார்? இப்போது வந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடு என்கிறார்கள்?” என்று கமல் ரஜினியின் பெயரை சொல்லாமலேயே வெளுத்தார்.”அவர்களின் பெயரை சொல்ல விரும்பவில்லை” என்றார்.
“ஸ்டெர்லைட் ஆலையை மூடச்சொல்லி உரத்த குரல் எழுப்பியவன் இந்த வைகோதான்! ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த இரண்டு பேர் உள்ளே புகுந்து ‘அரசியல்வாதிகள் உள்ளே வரக்கூடாது என்று குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.”என்றார்.
“ரஜினியின் ஆன்மீக அரசியல் எடுபடுமா?”
“ஒருக்காலும் நடக்காது.திராவிட சக்தியின் ஓட்டுகளை சிதறடிக்கும் முயற்சி ஈடேறாது!”
“சினிமா கவர்ச்சி இருக்கிறதே,கூட்டம் கூடுகிறதே?”
“எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிடமுடியாது, அவர் அணையாத தீபம். அண்ணாவும் கலைஞரும் அரவணைத்து சென்று அழிக்கமுடியாத சக்தியாக விளங்கினார்.திமுகவிலிருந்து விலகி வந்து தனித்த சக்தியாக இருந்தார்.அவரைப் போல லட்சத்தில் ஒருவர் கூட ஆகி விட முடியாது.” என்கிறார் வைகோ.
“பிஜெபியினால் இங்கு காலூன்ற முடியாததால் ஐ.பி., ரா, என்போர்ஸ் மென்ட் ,புதிய கட்சிகளை உருவாக்குதல் போன்ற காரியங்களில் ஈடுபட்டிருக்கிறது” என்பதையும் சொன்னார்.