கலைப்புலி தாணு தலைமையில் இன்று தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் கூடியது. இதில் பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளனர்.டிஜிட்டல் சினிமா வருகை ஏற்கனவே பிலிம் ரோலை முற்றிலுமாக அழித்தது. ஆனால், என்ன தான் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி என்று கூறப்பட்டாலும், இதை ஆயுதமாக எடுத்துக்கொண்டு க்யூப், யுஎப்ஓ, பிஎக்ஸ்டி போன்ற தொழில் நுட்பங்களால் தயாரிப்பாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.இந்த தொழில் நுட்பங்களை சில நிறுவனங்கள் கையில் வைத்து கொண்டு தயாரிப்பாளர்களின் பணங்களை கொள்ளையடித்து வருகின்றன.இதனால், இதற்கு ஒரு முடிவு கட்டும் வகையில் மூன்று மாதங்களுக்கு எந்த படங்களையும் ரிலிஸ் செய்வதில்லை என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளனர். தயாரிப்பாளர்களின் இந்த முடிவு தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.