தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்துள்ள’ பாகுபலி ‘பட வெளியீடும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர் நோக்கியுள்ள தமன்னா,தமிழில் ராஜேஷ் இயக்கத்தில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு இதழுக்கு அளித்துள்ள பேட்டியில்,
”நிறைய தயாரிப்பாளர்களும், இக்குநர்களும் கதைக்கு முத்த காட்சி, நீச்சல் உடை தேவை என்றும் அதில் நடிக்க வேண்டும் என்றும் என்னிடம் வற்புறுத்தினர். அதனை நான் ஏற்கவில்லை. முத்தம், நீச்சல் உடையில் நடிப்பதற்கு ஒரு போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.என்னை பொறுத்தவரை அது போன்ற காட்சிகளில் நடிப்பது தவறாகப்படுகிறது. எனவேதான் அப்படி நடிக்க கூடாது என்று இருக்கிறேன். நான் அழகான உடைகளில் ரசிக்கும்படி தோன்றுவேன். அதற்கு மறுப்பு சொல்ல மாட்டேன்,” என்று கூறியுள்ளார்.