ஐ.பி.எல்.லுக்கு எதிரான நேற்றைய போராட்டத்தில் ‘சீருடை அணிந்த ‘ போலீஸ்காரர்களை விஷமிகள் சிலர் தாக்கி இருக்கிறார்கள் என்பதாக செய்தி .
போலீசார் தடியடி நடத்துவதற்கு முன்னர் நடந்ததாக சொல்லப்படுகிறது. இதை சூப்பர்ஸ்டார் ரஜினி கடுமையாக கண்டித்திருக்கிறார்.
“இந்த வன்முறைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் தொடர்பில்லை. நாங்கள் அறவழியில் போராட்டம் நடத்தியவர்கள்” என பாரதிராஜா இன்று செய்தியாளர்களிடம் மறுப்புத் தெரிவித்து விட்டார்.
ரஜினிகாந்த் தனது கண்டனத்தை டுவிட்டர் வழியாக பதிவு செய்திருக்கிறார்.
“சீருடையில் இருந்த காவலர்கள் தாக்கப்படுவது வன்முறையின் உச்சக்கடம்.இத்தகைய வன்முறை கலாச்சாரம் கிள்ளி எறியப்பட வேண்டும்.இல்லையேல் நாட்டுக்குப் பேராபத்து. கடுமையான சட்டங்களை இயற்றவேண்டும்” என பதிவு செய்திருக்கிறார்.
உண்மைதான்! சீருடையில் ஒரு பெண் காவலர் ஏழையின் குடிசைக்கு தீ வைத்தது நடந்ததும் இதே சென்னையில்தான் !