ரணத்தை கிளறினால் புழுக்கள் வருகிறது. புலம்பலின் உச்சம் தெலுங்குத் திரை உலகில் !
கதாசிரியர் கோனா வெங்கட் அழாத குறையாக அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.”எனக்கும் பாலியல் வன்புணர்வுக்கும் சம்பந்தமே இல்லை.என்னையும் தொடர்பு படுத்தி ஸ்ரீ ரெட்டி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.அரசு ஒரு விசாரணை குழு அமைத்து உண்மையைக் கண்டு பிடித்து அறிக்கையாக வெளியிடவேண்டும்!” என்று கூறி இருக்கிறார்.
ஆனால் அபூர்வா என்கிற கேரக்டர் ரோல் பண்ணுகிறவர் ஸ்ரீ ரெட்டிக்கு சப்போர்ட்டிவ்வாக குரல் கொடுத்திருக்கிறார்.”எனக்கு அந்த மாதிரியான அனுபவம் இல்லிங்க. ஆனா தெலுங்கு சினிமாவில் ‘அது’ பரவலாக நடப்பதுதான்!” என்கிறார்.
இதற்கிடையில் ஸ்ரீ லீக்சை தடுப்பதற்காக சில முயற்சிகளும் நடந்திருக்கின்றன.
“என் வாயை அடைப்பதற்காக சில பெரிய மனிதர்கள் பேரம் பேசினார்கள். வாய்ப்புகள் தருவதாக சொன்னார்கள்.ஆனால் நான் மறுத்து விட்டேன். அவர்கள் திருநங்கைகளையும் விடுவதில்லை” என்கிறார் ஸ்ரீ ரெட்டி.