மானம்,மரியாதையை மந்தையில் போட்டு மிதித்து வெளு வெளுவென வெளுத்தால்தான் வழிக்கு வருவார்கள் போலிருக்கிறது.
பாவம் அந்த நடிகை. ‘கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என சொல்லி ஒரு பிரபலம் ‘புல் மீல்ஸ்’ சாப்பிட்டு விட்டு கையைக் கழுவிக்கொண்டு போய் இருக்கிறார். இன்னொரு வசனகர்த்தா ‘வாய்ப்பு வாங்கித் தருகிறேன்’ என்று சொல்லி படுக்கையில் புரட்டி விட்டு கதையை முடித்திருக்கிறார். இன்னொருவர் ‘அடுத்த படங்களில் நீதான் ஹீரோயின்’ என சொல்லி நித்தமும் கல்யாணம் பண்ணியிருக்கிறார்.
ஆனால் எதுவுமே நடக்கவில்லை.
‘பொறுத்தது போதும் அவுத்து ஏறி! அந்தரங்கமாக நடந்த லீலைகளை அம்பலத்துக்கு கொண்டுவா’ என நடிகை ஸ்ரீ ரெட்டி துணிய தற்போது இருபத்தி நாலு மணி நேரத்தில் இணங்கி வந்திருக்கிறார்கள் ஆந்திரத்து சினிமாக்காரர்கள்!
ஸ்ரீ ரெட்டி மீது தடை இல்லை என்கிறார் சங்கத் தலைவர் சிவாஜி ராஜா.
‘இரண்டு படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு!’
வில்லங்க இயக்குநர் ராம்கோபால்வர்மாவுடன் ஒரு வாய்ப்பு?
தெலுங்கானா அரசுக்கும்,மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்துக்கும் மனித உரிமை ஆணையம் நடிகை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள் என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
வெட்கக்கேடு!