பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளபுதிய படம் ‘திலகர்’.பெருமாள் பிள்ளை இயக்கியுள்ளஇப்படத்தைக் கலைப்புலி தாணு வெளியிடுகிறார்.இப்படம் குறித்து இயக்குநர் பெருமாள்பிள்ளை கூறியதாவது, இது ஒரு துணிச்சல் மிக்க இதயம் கொண்டவனின் வாழ்வில் நடந்ததை அடிப்படையாக வைத்து படம் உருவாக்கப் பட்டுள்ளது.
இது 1990ல் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்த ஒருவர் பற்றிய கதைதான். அவருடைய கதையை மையமாக வைத்து விரிவாக்கி கற்பனையும் கலந்து உருவாகியுள்ள படம். இப்படக்கதை தனியொருவரின் கதை என்றில்லாமல் கிராமம், மண், மக்கள், கலாச்சாரம் பற்றி யதார்த்தமாக கூறும் படமாகவும் இருக்கும்.நாயகன் துருவா,கதாநாயகி இரண்டு பேர் ஒருவர் மிருதுளா பாஸ்கர். இவர் ‘வல்லினம்’ நாயகி. இன்னொருவர் அனுமோல் . ‘ஈசன்’ படப்புகழ் சுஜாதா மாஸ்டரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.’பூ’ ராமு, ‘ஈசன்’ சுஜாதாஉள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் ஒரு யதார்த்த பதிவு. 90 களில் நடக்கும் கதை.
ஒரு துணிச்சல் மிக்க இதயம் கொண்டவனின் வாழ்வில் நடந்ததை வைத்து படம் உருவாக்கப் பட்டுள்ளது. 90ல் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து சினிமாவுக்கு சிலவற்றை சேர்த்து இருக்கிறோம். அந்த திலகர் பற்றிய நிகழ்வுகள் 2 ஆண்டுகளில் நடந்திருக்கும் இதில் நடப்பது 10 ஆண்டுகள் இருக்கும்.பிரச்சினை ஏதுமில்லை.தங்கள் ஊர் சம்பந்தப்பட்டகதை என்றதும் மகிழ்ச்சி அடைந்த நெல்லை மக்கள் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.இப்படி இந்தப் படத்து அனுபவங்களில் படமெடுத்தது மறக்க முடியாதது என்றால் சென்சாரில் நாங்கள் பட்டவை அதைவிட மறக்க முடியாதவை..படத்தில் ஒரு ஆபாசம் இல்லை. தொப்புள் தெரியும் காட்சி இல்லை. ஆபாச வசனம் இல்லை. ஆனால் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். கேட்டால் வன்முறை என்கிறார்கள்.இதில் அப்படி ஒன்றும் வன்முறைக் காட்சி இல்லை. பல படங்களில் வருவதைப்போல ரத்தம் சொட்ட சொட்ட வன்முறைக்ககாட்சி எதுவும் இல்லை.இவர்கள் ‘யூ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிற படங்களை ஒப்பிட்டால் இதில் ஒன்றுமே இல்லை. வன்முறை கூடாது என்று பேசுகிற படம் இது.வன்முறை, குழுவாக கற்பழித்த கொடூரக் காட்சிகள் கொண்ட ‘பருத்திவீரன்’ படத்துக்கே அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.நிறைய படங்கள் ஆபாசம், வன்முறை, அருவருப்பு.. கொலைசெய்து கழுத்தை அறுத்து ரத்தம் வருவதைப் பார்த்து ஆனந்தம் அடைவது போல் காட்சிகள்.. அதற்கெல்லாம் ‘யூ’ சான்றிதழ் கிடைக்கிறது . நாலைந்து தலைகளை துண்டாக்கிப் போடுகிற படங்களுக்குக்கூட’ ஏ’ இல்லை. இதற்கு மட்டும் பிடிவாதமாக அடம் பிடித்தார்கள்.
நான் இவர்களுடன் போராடி சோர்வு அடைந்து விட்டேன். சென்சார் போர்டில் இங்கு படம் பார்ப்பவர்களுக்கு வட்டார மொழி தெரிவதில்லை. நல்ல வார்த்தைகள் எவை என்று தெரிவதில்லை.கெட்ட வார்த்தைகள் எவை என்று புரிவதில்லை.
ஒரு படைப்பாளி இவர்களிடம் படும்பாடு பெரிய போராட்டம். அவர்களுக்கு சினிமாவும் தெரியவில்லை. மக்கள் வாழ்க்கையும் தெரிய வில்லை. யதார்த்தமும் தெரிவதில்லை. படாதபாடு படுத்துகிறார்கள்.
ஒரு படத்துக்கு ‘ யூ’ சான்றிதழ் என்பது வரி விலக்கிற்கு உதவி செய்வது. எங்கள் படத்துக்கு ‘ ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். போராடி பார்த்துவிட்டு வேறுவழி இல்லாமல் வாங்கிவிட்டோம்.படத்தின் ட்ரெய்லர் பார்த்துவிட்டு பிடித்துப்போய் தாணுசார் படம் பார்க்க வேண்டும் என்றார் .படம் பார்த்ததும் பாராட்டினார். தானே கலைப்புலி இண்டர் நேஷனல் சார்பில் வெளியிடுவதாகக் கூறினார் என்கிறார் .