இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ மன்றத்தில்
பாலுமகேந்திரா நூலகம் நடிகர் சத்யராஜ் இயக்குனர்கள் வெற்றிமாறன் ராம்
சுப்ரமணிய சிவா மீரா கதிரவன் நடிகை ரோகிணி எழுத்தாளர் பாமரன்
ஆகியோரால் துவக்கப்பட்டது .
உதவி இயக்குனர்களிடையே வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில்
சென்னை சாலிக்கிராமம் எண் 1 திலகர் தெருவில் இயக்குனர் எழுத்தாளர்
அஜயன்பாலா இந்த பாலுமகேந்திரா நூலகத்தை துவக்கியிருக்கிறார்.
தொடக்க விழாவில பேசிய நடிகர் சத்யராஜ் ”. கடலோரக்கவிதைகள்
படத்தை பார்த்து விட்டு சிவாஜி என்னை அடுத்த பத்து வருடஙுகளுக்கு உன்னை
யாரும் அசைச்சிக்க முடியாது என்றார், வேதம் புதிது பார்த்துவிட்டு எம் ஜி ஆர்
கையைப் புடிச்சி முத்தம் கொடுத்தார். ஓன்பது ரூபாய் நோட்டு பார்த்துவிட்டு
பாலுமகேந்திரா கட்டிபிடித்து கண்கலங்கி பாராட்டினார்
அஜயன்பாலா எழுதிய மார்லன் பிராண்டோ புத்தகம் வாசிச்சப்புறம் தான்
பாஷை தெரியாத படங்களிலும் நடிக்கலாம் என தெரியவந்து அதுவரை நடிக்க
மறுத்த தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்து சம்பாதிச்சேன் அதுக்கு
காரணமாயிருந்த அஜயன்பாலா உருவாக்கிற இந்த நூலகத்துக்கு பெரிசா
உதவணும்னு நெனக்கிறேன் கூடியவிரைவில் அதை அவரோடபேசி
அறிவிப்பேன் என பேசினார்.
இயக்குனர் வெற்றிமாறன் பேசுகையில், நூலகம்ங்கிறது வெறும் படிக்கிறதோட இல்லாம
அறிவுப் பகிரல். பலரும் தங்களுக்குள் ஷேர் பண்ணிக்கும் போது அது
ஆரோக்கியமான சமூகத்தை வளர்க்குது. இன்னைக்கு அது அவசியம் என்றார்.
இயக்குனர் ராம் பேசும்போது நன்றாக படித்தால்தான் நாம் மத
தீவிரவாதியாகமல் பாலியல் வன்முறையில் ஈடுபடாமல் இருக்க முடியும் பால்
தாக்கரேவை தலைவனாக கொண்ட ஆன்மீக அரசியலில் ஈடுபடாமல்
இருக்கமுடியும் என நடப்பு அரசியலை பொடிவைத்து பேச, அரங்கில் கைதட்டல்
அதிர்ந்தது
தொடர்ந்து பேசிய எழுத்தாளர் பாமரன் தன் வழக்கமான நகைச்சுவை
உணர்வுடன் நானும் ஆரம்பத்தில் நூலகம் துவக்கினேன் ஓருவரும் வரவில்லை,
பிற்பாடு அது டாஸ்மாக் ஆனபோது கூட்டம் முண்டியடித்தது. இந்த நிலை
பாலுமகேந்திரா நூலகத்துக்கு வரவிடாமல் பாதுகாக்க வேண்டியது உங்கள்
ஓவ்வொருவரின் கடமை என்றார்.
தொடர்ந்து இயக்குனர் ஏ எல் விஜய், ரோகிணி, மீரா கதிரவன், நாச்சி முத்து
ஆகியோர் பேச, அஜயன்பாலா அனைவருக்கும் நன்றி கூறினார்.
இறுதியில், அண்மையில் காஷ்மீரில் வன்புணர்வுக்கு ஆளான எட்டுவயது சிறுமி
‘ஆசிபா’வுக்கு இரங்கல் தெரிவிக்க வந்த சத்யராஜ் பேச முடியாமல் நா தழுக்க
அழுதவர், பின் ஓரு நிமிடம் மவுன அஞ்சலி செய்யும்படி அனைவரையும்
கேட்டுக்கொள்ள மவுன அஞ்சலியுடன் கூட்டம் இனிதே முடிந்தது