அவளுக்கும் இதயம் உண்டு பாசம் உண்டு.
பகுத்தறியும் உயர்வும் உண்டு!
அவிழ்த்துப் போட்டு நடிப்பதினாலேயே அவளை தடம் மாறுகிறவள் தப்பானவள் என எடை போட்டுவிடக்கூடாது.
புராண காலத்திலேயே புத்திக்கெட்டுப் போனவர்கள் முனிவர்கள்தான்!
சன்னி லியோன்!ஆங்கிலப்படங்களின் ஆபாச நடிகை. மணமானவள்!குழந்தைகளும் உண்டு!
உலகையே உலுக்கி இருக்கும் சின்னஞ்சிறு அரும்பு ஆசிபா!
எட்டு வயது அப்பாவி.சில அரக்கர்களின் கைகளில் சிக்கி சிதைக்கப்பட்டவள்.
சன்னி லியோன் தனது மார்புற மகளை இறுக்கமாக அணைத்தபடி என்ன சொல்கிறார் தெரியுமா?
“எனது இதயக்கூட்டில் ஒவ்வொரு அணுவும் உனக்காகவே!
உடல்,ஆவி,முழுவதும் கொடுத்து எந்த தீய சக்திகளும் உன்னை அணுகாமல் பாதுகாப்பேன்.உயிரையும் கொடுப்பேன் என் உதிரத்தில் பிறந்த உங்களுக்காக!”என்கிறார்.