பெரிய வீட்டுக் கல்யாணம். ஊரே கூடி அமர்க்களப்படும். ஆனாலும் ஒரே ஒரு ஆள் மட்டும் வரவில்லை என்றால் பந்தியிலேயே கசமுசாவையும் சேர்த்துப் பரிமாறி விடுவார்கள்.
“அவருக்கும் பெரியவருக்கும் எதோ பிரச்னையாம் .பெண் வீட்டுக்காரர்கள் மரியாதை செய்யலியாம்.அதான் அவர் வரல”என்பது போல கட்டி விட்டு விருந்துக்கு பெரிய ஏப்பம் போட்டு விட்டு கிளம்புவார்கள்.
அதைப்போல” போன போராட்டத்துக்கு வந்த தல இந்த போராட்டத்துக்கு ஏன் வரல.” என்பது ஊடகத்தினருக்கு சந்தேகம்.! சங்கத்தினருக்கும்தான்!
வரும்ல!
நாம் விசாரித்த வகையில் அஜித் தரப்பில் என்ன பேசிக் கொண்டார்கள் என்றால்………
“கமல் அரசியல் கட்சி ஆரம்பித்துவிட்டார்.ரஜினி அரசியலுக்கான ட்ரெய்லரை விட்டிருக்கிறார். விஷால் ஆர்.கே .நகர் அரசியலில் பிள்ளையார் சுழி போட்டு விட்டார். இப்படி அரசியல் வாதிகள் கூடிய மேடையில் எங்கள் தலயும் போய் உட்கார்ந்தால் அரசியலை ஆதரிப்பதாக மக்கள் நினைத்து விடுவார்கள்.அதனால் போகவில்லை.யூரோப் போகிற ப்ரோகிராமும் கேன்சல். இஸ்ரோ விஞ்ஞானிகளின் அழைப்பின் பேரில் அங்கு போவார் என்று நினைக்கிறோம்.அவர் அரசியல் வாதி இல்லை.மக்கள் நம்புகிற நடிகர் “என்கிறார்கள்.