ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் ஏ.தணிகை வேல் தயாரித்துள்ள படம் ‘இரவும் பகலும் வரும்’. பால ஸ்ரீராம் இயக்கும் இப்படத்திற்கு தினா இசையமைத்துள்ளார்.. ‘அங்காடித் தெரு’ மகேஷ், அனன்யா, ஏ.வெங்கடேஷ், ஜெகன், சாமிநாதன், யுவராணி, சஞ்சனா சிங், ஷகிலா மற்றும் பலர் நடித்துள்ளனர் . இப்படம் மார்ச் 11.ந்தேதி வெளியாவதாக இருந்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக இப்படம் திடி ரென தள்ளி வைக்கப்பட்டது.தற்போது பிரச்னை முடிந்துள்ள நிலையில் இப்படம் வருகிற 20 ம்தேதி வெளியாகிறது. இது குறித்து தயாரிப்பாளர் பி.தணிகை வேல் கூறியதாவது, “பொறியியல் படிக்கும் ஒரு கல்லூரி மாணவன், எல்லோரும் மதிக்கும் வகையில் நல்ல முறையில் நடந்து கொள்ளும் நல்ல பண்புகளை கொண்டவன். காலையில் கல்லூரிக்கு செல்லும் கதாநாயகன், இரவில் மட்டும் திருடனாய் உலாவுகிறான். அவன் ஏன் திருடன் ஆனான்? எதற்காகத் திருடுகிறான் என்பதே ‘இரவும் பகலும் வரும்’ படத்தின் கதை.இப்படம் குறித்து சில பிரச்சனைகள் ஏற்பட்டது உண்மைதான் ,தற்போது அது முடிவுக்கு வந்து விட்டது, எனவே இப்படத்தை முன்பை விட அதிக திரையரங்குகளில் வருகிற 20ம தேதி வெளியிட இருக்கிறோம் .இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்கிறார்.