எத்தனை நாளைக்குத்தான் வலியை மறைக்க முடியும்? வாய் விட்டே கதறிவிட்டார் அரவிந்தசாமி. மற்றவர்கள் வாயை மூடி வலியை வயிற்றுக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொண்டு உருண்டு புரண்டு சாமிகளுக்கு வேண்டுதல் வைக்க சாமியோ கக்கி விட்டார்.
“ரொம்பவும் வருத்தமா இருக்கேன்!வெறுப்பாகிப் போச்சு! வேலை நிறுத்தத்தில் எந்த முன்னேற்றமும் இல்ல. எப்போது முடியும்?வேலைக்கு திரும்பனும்யா! ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கஷ்டப்படுறாங்க ! நல்ல முடிவுக்கு வாங்க” என சொல்லியிருக்கிறார்.
கவலைப்படாதிங்க சாமி! இன்னிக்கி சாயங்காலம் நல்ல சேதி வரலாம்!