ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள புதிய படத்தின் தலைப்பு ‘மர்ம மனிதன்’ என வைக்கப்பட்டுள்ளதாக கோலிவுட்டில் தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘ஐ’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் தற்போது விஜய் மில்டனின் ‘பத்து எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரம் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து, ‘அரிமா நம்பி’ இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஒரு படமும், கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க உள்ளார் விக்ரம். கௌதம் மேனன் படம் ஜூனில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ஆனால், அதற்கு முன்னதாக வரும் ஏப்ரலில் ஆனந்த் சங்கரின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இப்படத்தில் விக்ரம் 2 வேடங்களில் நடிக்கிறார்.ஜோடியாக காஜல் அகர்வால், மற்றும் பிரியா ஆனந்த் என இரண்டு நாயகிகள்நடிக்கின்றனர்.