நடிகர் அஜீத் குமாருக்கு இன்று மூக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. அவர் வேகமாக குணமடைந்து வருகிறார். நடிகர் அஜீத் குமார் வெகு நாட்களாக மூக்கு தண்டில் சைனஸ் பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்தார்,இதனால் அவருக்கு சுவாசிப்பதிலும் , அடிக்கடி மூக்கு அடைத்துக் கொண்டு, பேசுவதிலும் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு மூக்குத் தண்டு அறுவைச் சிகிச்சை (Septoplasty) செய்ய மருத்துவர்கள் பரிசீலித்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு தனியார் மருத்துவ மனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குஇன்று காலை பிரபல காது மூக்கு தொண்டை நிபுணர் டாக்டர் எம் கே .ராஜசேகர் சைனஸ் அறுவைச் சிகிச்சையைச் செய்தார். அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. அஜீத் குமார் வேகமாக குணமடைந்து வருவதாக அஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.