இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் உதவியாளர்களில் ஒருவரும் பிரபல இயக்குனருமான அமீர்ஜான் இன்று காலை சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 73.
‘பூவிலங்கு’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அமீர்ஜான், தொடர்ந்து, ரஜினிகாந்த் நடித்த சிவா மற்றும் நெஞ்சத்தை அள்ளித்தா, நட்பு, தர்ம பத்தினி, வண்ணக்கனவுகள், துளசி, உழைத்து வாழ வேண்டும், எதிர்காற்று, உன்னை சொல்லி குற்றமில்லை உள்பட 20 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது
இறுதிச் சடங்கு சென்னையில் நாளை காலை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவிந்து உள்ளனர். அமீர்ஜானின் உடலுக்கு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அத்துடன் அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் , திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.