அடுப்பிலிருந்து இன்னும் சோத்தை ஏறக்கவேயில்லை,அதுக்குள்ள பந்தியிலேயே போய் உட்கார்ந்து “அது வேகல,இது சொத்தை” என்று பல் விலக்காதவன் கூட நொட்டைகள் சொல்வான். அது மாதிரிதான் ஆகி விட்டது ‘காலா’படத்தின் ரிலீஸ் தேதி விவகாரமும்.!
“விவகாரமே இல்லைங்க ” என்கிறது தயாரிப்புத் தரப்பு.
“மும்மொழி ரிலீஸ்.ஒத்த பிள்ளைக்கே இந்தக் காலத்தில் சிசரியன் என்கிறான்.காலா மூணு மொழி படம்.எவ்வளவு கஷ்டம் இருக்கும் என்பதைப் பாருங்க.எல்லா வேலைகளும் முழுமையா முடிஞ்ச பிறகு தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிடும்.கவலையே படாதீங்க. நீங்களே தேதியை முடிவு பண்ணாதிங்க”என்கிறார்கள்.
நீங்க சொன்னா சரியாத்தான்பு இருக்கும்!