அதிகாலை 2 மணி . சென்னை மெரீனா கடற்கரை. அலைகள் மட்டும் ‘ ஹோ’வென்ற இரைச்சலுடன் ஆர்பரிக்க ,ஆள் அரவமின்றி காணப்படுகிறது. திடீரென நாலுகால் பாய்ச்சலில் பறந்தோடி வருகின்றன இரண்டு குதிரைகள். ஒரு குதிரையில் ‘பிரியாணி ‘புகழ் நடிகர் ஆர்யா,மற்றொரு குதிரையின் மீது ‘கோங்குரா’ குல்பி நடிகை அனுஷ்கா. இவர்களுக்கு காவலாக ஆஜானுபாகுவான நான்கு பாது காவலர்கள். நமக்கு ஆச்சரியம் ! விசாரணையில் இறங்கினோம் .இருவரும் சென்னையில் இருக்கும் நாட்களில் மட்டும் தினசரி குதிரை சவாரி செய்வது வழக்கமாம். மெரீனா கடற்கரையில் குதிரை சவாரி என்பது போலீசாரால் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது சாதாரண மக்களுக்கு த்தான் என்பது போல சமீபகாலமாக இச் சம்பவம் சென்னை மெரீனா கடற்கரையில் அரங்கேறி வருகிறது. ஒருவேளை சிறப்பு அனுமதி ஏதும் வாங்கிவைத்துள்ளார்களோ என்னவோ ! என கிண்டலாக சிரிக்கிறது கோடம் பாக்கம்.