இயக்கம் -பெருமாள் பிள்ளை.
நடிப்பு -கிஷோர்,துருவா,பூ ராம் ,மிருதுளா
ஒளிப்பதிவு- ராஜேஷ் யாதவ். இசை-கண்ணன் .
தென் தமிழ்நாட்டின் சுற்று வட்டாரங்களில் நடக்கும் சாதி மோதல்களை மையமாக வைத்து உருவாகியுள்ளஇப்படம் திருநெல்வேலியில் உள்ள வெள்ளூர் கிராமத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னாள் நடப்பது போன்று உருவாகியுள்ளது. அந்த ஊரிலுள்ளவர்கள் கைகளில் எப்போதும் அரிவாளுடன் வலம் வருபவர்கள்.வெட்டு குத்துக்கு அஞ்சாதவர்கள் . அக்கிராமத்தினரின்
நிலையை மாற்றி , பகை ,மற்றும் பழியுணர்ச்சி காரணமாக ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டு சாவது, இனிமேலாவது மாற வேண்டும் என்று நினைக்கிறார் கிஷோர். தன் தம்பி துருவாவை படிக்க வைக்க வேண்டும் என்பதும் கிஷோரின் ஆசை. நல்லது செய்ய நினைக்கும் அவருக்கு தான் ஊரில் முதல் மரியாதை . அவரின் பேச்சுக்கு கட்டுப்பட்டவர்கள் அவ்வூர்க்காரரர் கள்
ஆனால், கிஷோரின் வளர்ச்சி பிடிக்காத பக்கத்து கிராமத்தை சேர்ந்த பூ ராம், கிஷோருக்கு பல இடைஞ்சல்களை தருகிறார். ஒருகட்டத்தில் கிஷோரின் வாழைத்தோப்பை அழித்து விட ,கடுப்பான கிஷோர், பொங்கி எழுந்து வாழைத்தோப்பை நாசமாக்கிய பூ ராமின் மூன்று மகன்களையும் அடித்து உதைத்து, போலீசிடம் ஒப்படைக்கிறார். வெளியே வரும் அவர்கள் குலசேகரபட்டினம் தசரா திருவிழாவின்போது கிஷோரை கொன்று விடுகிறார்கள்.தேவர்மகன் கதையை மீண்டும் நினைவு படுத்துகிறார் இயக்குநர் பெருமாள்பிள்ளை.கிஷோரின் வெட்டரிவாள் மீசையும், பாடிலாங்குவேஜும் கமலை ஒத்திருக்கிறது. அவருடைய பாத்திரப்படைப்பு நன்றாக இருப்பதோடு தன் நடிப்பால் மேலும் உயர்ந்து நிற்கிறார் கிஷோர். எதிரிகளின் கையில் சிக்கி சாகும் காட்சிகளில் நம்மையும் அறியாமல் ‘உச்’ கொட்ட வைத்து விடுகிறார்.அறிமுக நாயகன் துருவாவின் மீது தான் பாதிகதையே நகர்கிறது. இயல்பாக நடித்துள்ளார். படத்திற்காக மாறுபட்ட தோற்றங்களில் வந்து அசத்துகிறார் துருவா . தாடி மீசையுடன் உருவத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் நல்லவேறுபாடுகாட்டியிருக்கிறார் துருவா. படத்திற்காக மாறுபட்ட தோற்றங்களில் வந்து அசத்துகிறார். கோழி அறுப்பதைக்கூடப் பார்க்கச் சகிக்காத துருவா அண்ணன் கிஷோர் கொலை செய்யப்பட்டதும், அம்மாவும், அண்ணியும் ‘பொண்டுக பய’ என்று பேசியவுடன் தலைகீழாக மாறி இவர் தானா அது ! என நம்மை வியக்க வைக்கிறார்.நாயகியாக நடித்திருக்கும் மிருதுளா சும்மா வந்து போகிறார்.
அலட்டாத கிராமத்து வில்லன்’பூ’ ராமு, இவர் நடிப்பில் உக்கிரபாண்டியின் கதாபாத்திரம் ஒருபடி உயர்ந்திருக்கிறது.மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.அலட்டாத கிராமத்து வில்லன். நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது இவருக்கு.நாயகன் துருவாவின் அம்மாவாக நடித்திருக்கும் டான்ஸ் மாஸ்டர் சுஜாதா , துருவாவை பார்த்து . என் வயிற்றில் வந்து இப்படி ஒரு புள்ள பொறந்துடுச்சே என்று வருந்துவதும், எதிரிகளைக் கொன்று எரித்து அந்தச்சாம்பலை ஊரெல்லாம் தூவிவிட்டு துருவா வரும்போது, வசனமே பேசாமல் , பெருமிதத்துடன் மகனை வரவேற்பதும், கடைசியில் என் பிள்ளையை நான் கொன்றுவிட்டேனே என்று கலங்கி ,குமுறுகிற காட்சிகளிலும் தெற்கத்தி தமிழச்சியாக அசத்தியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் குறைவான காட்சிகளில் வந்து போனாலும் நிறைவு! தசரா காட்சிகள் உள்பட ,கிராமத்து அழகை மிக அற்புதமாக பதிவு செய்திருக்கிறார். கண்ணன் இசையில் பாடல்கள் ஓகே ரகம்,பழிவாங்கும் உணர்வு மனிதனை எப்போதும் நிம்மதியாக வாழவிடாது என்பதை மிக அழுத்தமாக காட்டியி ருக்கிறார் இயக்குனர் பெருமாள் பிள்ளை.கடைசியில் பத்துவயதுப்பையன் மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் என்பதாக (எழுத்தில்) காட்டிவிட்டு ,நான்கு சிறுவர்களை மீண்டும் வன்முறை கலாசாரத்தை கையில் ஏந்த செய்தது ஏனோ !