இன்று காலை 9மணிமுதல் மதியம் 1.30 வரை கில்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.இவ்விழாவிற்கு எர்ணாவூர் எ.நாராயணன்எம்.எல்.ஏ.அவர்கள் தலைமை தாங்கினார்.நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யா குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்கள். இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வி.சேகர், மு.களஞ்சியம்,மற்றும் நடிகர் வையாபுரி,படவாகோபி,திருமதி.படவாகோபி மற்றும் தர்மபுரம் ஆதீனம் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
இதில் ராமச்சந்திரா எலும்பு தேய்வு மருத்துவபிரிவிலிருந்து ஜம்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் அவர்களும்,பொது மருத்துவத்திற்காக சுகம் மருத்துவமனையின் திரிபன், ஐய்யப்பன் பாலிகிளினிக் ராஜேஷ்வர் மற்றும் எஸ் ஆர் சி மருத்துவமனையின் சங்கநிதி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.உடன் கில்டு செயலாளர் ஜகுவார் தங்கம்,மதி ஒலிகுமார் மற்றும் முன்னாள் தலைவர் ருக்மாங்கதன் ஆகியோர் உடன் இருந்தனர்.