இன்று அபிஷேக் பச்சன்- ஐஸ்வரியா திருமணநாள். 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. வாழ்கையின் அர்த்தமாக ஆறு வயது மகள் ஆராதியா.மகிழ்ச்சியாக ஆண்டுகளை கடக்கும் காதல் தம்பதிகளை வாழ்த்துவோம்.
பொதுவாக வெளியிலிருந்து வீடு திரும்பும் கணவனின் சட்டையில் நீளமான ஒற்றை முடி இருந்தாலே வீட்டில் சந்தேகக்கோடு அன்றைய சல்லாபத்துக்கு வேட்டு வைத்துவிடும்.இப்படியெல்லாம் அந்த காலத்து சினிமாக்களில் பார்த்தது நிறைய.!
காதலும் காமமும் கலந்து கட்டி அடிக்கும் சினிமாவில் கணவன் மீது மனைவிக்கு சந்தேகம் வராமல் இருக்குமா? அதுவும் இலவச இணைப்பு மாதிரி செல்போனில் கொஞ்சுவது அதிகம்.
“ஐஸ்வர்யா, நீங்கள் உங்கள் கணவனின் போனை ஒட்டுக் கேட்டல் உண்டா!?”
ஒரே பதில் ” நெவெர்!”
அதிர்ஷ்டக்கார கணவன்.