நியூட்ரினோ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் எத்தகைய கோரங்கள் நடக்கலாம் என்பதை சொல்லும் படமாகவும் எடுத்துக் கொள்ளலாம்..மெர்க்குரி கசிவினால் மலைக்கிராமம் முழுமையாக நாசம் ஆகிறது.வாய் பேச முடியாமல்,காது கேளாமல் போகிறது. பாதிக்கப்பட்ட ஐவருக்கு ஏற்படுகிற கொடுமையை முற்பாதியில் சொல்லிவிட்டு பிற்பாதியில் வித்தியாசமான பிரபுதேவாவை கொண்டு வருகிறார்கள் ஆவியாக!
ஜிகர்தண்டா வழியாக அடுத்த தளம் சென்ற கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தின் வழியாக இன்னும் ஒரு தளம் சென்றுள்ளார்,ஒளிப்பதிவு,இசை இரண்டுமே மெர்க்குரியின் நாயகன் நாயகி என சொல்லலாம். அதாவது வசனமே இல்லாத ஒரு ஊமைப்படத்துக்கு இந்த இரண்டும்தான் ஜீவன்.”எங்களாலும் இப்படி படம் எடுக்க முடியும் ” என்கிற இயக்குநருக்கு ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு,இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இருவரும் பக்கபலமாக இருக்கிறார்கள்.
உயிரற்ற ரோபோவுக்கு உயிர் கொடுக்கும்போது காலம் காலமாக நம்பப்படும் ஆவியை நம்புவோமே!
கண் பார்வையற்ற ஆவியாக பிரபுதேவா.கோரமான மேக்-அப் பில்!ரேடியம் மின்னுகிறது.செம. இவரது மனைவியாக ரம்யா நம்பீசன் சிறிதே நேரம் என்றாலும் அனுபவம் நடிக்கிறது.
தவறான முடிவெடுத்து அடுத்தடுத்து கொலை செய்து விட்டோமே என ஆவி வருந்துவது ஹைலைட்டாக தெரிகிறது.
காட்சி அமைப்புகள், நிகழும் இடம் என எல்லாமே அசத்தல்.என்றாலும் பிற்பாதியில் ஒரு தளர்வு! படம் மட்டும் மவுனம் துறந்திருந்தால் உயரமே தனி!