ஆட்டிப்படைத்தவர்கள், அசிங்கப்படுத்தியவர்கள் , உச்சங்கள் எல்லாம் இன்று போன் எடுத்துப் பேசுவதற்கும் ராசி பலன் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். “கும்பராசிக்கு என்ன பலன்னு பாருங்க.கும்மி எடுக்காம இருந்தா சரி” என்று கதை சொல்லிகளும் கன்னத்தில் கையை வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள்.
அவ்வளவு பயம் நயன்தாராவுக்கு கதை சொல்வதென்றால்!
இந்திய அளவில் ஐஸ்வர்யாராய்க்கு அடுத்து டிமாண்ட் உள்ளவர் நயன்தான்! சூப்பர்ஸ்டார்களே ஆசைப்பட்டாலும் நயனுக்கு கதை பிடித்திருந்தால் மட்டுமே ஓகே! இல்லையென்றால் குல்பிதான்!
இந்த அளவுக்கு டிரெய்லர் ஓட்டுகிறோம் என்றால் காரணம் இல்லாமல் இருக்குமா?
கேரளத்தில் மிகவும் தொன்மையான படப்பிடிப்பு நிலையம் ‘மெர்ரிலாண்ட்’
.மெர்ரி லாண்ட் சுப்பிரமணியம் என்றால் மிகவும் பிரசித்தம்.அந்த நிறுவனம் மீண்டும் இயங்கத் தொடங்கி இருக்கிறது.அவர்கள் ‘லவ் ஆக்சன் டிராமா’ என்கிற பெயரில் படம் தயாரிக்கிறார்கள். த்யான் என்கிற இயக்குநர்தான் கதை சொல்லியும் கூட!
“ஹீரோ யார்?” என கேட்கிறார் தயாரிப்பாளர்.
“நிவின் பாலி சரியாக இருப்பார் ”
“சரி! ஹீரோயின்?”
“நயன்தாராதான் !.ஆனால் அவரிடம் யார் பேசுவது?பிடி கொடுப்பாரா, மறுத்து விடுவாரா , யார் பொறுப்பேற்பது?”-இயக்குநரின் நியாயமான கேள்வி.
நயனுடன் யார் பேசுவது என்கிற டிஷ்கஷனே வெகு நேரம் ஓடுகிறது. முடிவில் த்யான் என முடிவு செய்கிறார்கள்.
போனை எடுத்த நயன்தாரா “உங்களுக்கு முப்பது நிமிஷம் டைம். கதை ,கேரக்டர் பிடிச்சிருந்தா நடிப்பேன். வேற சமரசமே இல்லை ஓகேயா?”என்கிறார் எடுத்த எடுப்பிலேயே!
“ஓகே மேடம்” பணிவு இழைகிறது.
முதல் பத்து நிமிஷம் டென்சன்.பின்னர் போகப்போக சிரிப்பும் கமென்ட்ஸ்களும்!
அப்பாடா நயனின் கால்ஷீட் கிடைத்து விட்டது.2 ஆண்டுகளுக்கு பின்னர் நயன் நடிக்கிற தாய் மொழிப்படம்!.டிசம்பரில் தொடக்கம்.