சக நடிகன் புகழ் அடைவதை சகித்துக் கொள்ள முடியாதவர்களும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். அந்துப்பூச்சி இல்லாமல் நெல்மணிகளை பரணில் சேமிக்க முடியுமா?
அதைப்போலாகி விட்டது சில தெலுங்கு நடிகர்களின் போக்கும்! ஸ்ரீ ரெட்டி புராணம் முடிந்து நடிகர் நாக சவுரியா சிறுகதை தொடங்கி இருக்கிறது. ஏப்.27-ம் நாள் வெள்ளிக்கிழமை இயக்குநர் விஜய்யின் ‘கணம்’ படம் வெளியாகிறது.கதையின் நாயகன் நாக சவுரியா. நாயகி கோத்தகிரி பொண்ணு ‘மலர் ‘சாய்பல்லவி.
இவர் மீது ஏவி விட்ட பழி அது விஜய் தலையில் வந்தா விழ வேண்டும்?
கணம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை நடிகர் புறக்கணித்து விட்டார்.
அப்படி என்னதான்யா சண்டை?
“மற்றவர்கள் சிறப்பாக நடித்து பேர் வாங்கிவிட்டால் சாய் பல்லவிக்கு பிடிக்காது. அன்று செட் அதகளம் தான். அவரை அமைதிப் படுத்துவது அவ்வளவு ஈசி இல்லை. உம்பாடு எம்பாடு என்றாகி விடும் “என்று குற்றம் சாட்டி இருந்தார் நடிகர்.
ஆனால் இதைப்பற்றி கேட்டால் “நானென்ன அப்படிப்பட்ட பொண்ணா?” என்கிறார் சாய்பல்லவி! ‘மாரி 2’ செல்வராகவனின் ‘படங்கள் வந்தால்தான் உண்மை தெரியும்.
“எனக்கும் நாக சவுரியாவுக்கும் எந்த பிரச்னையும் இல்ல.அவர் நல்ல நடிகர்.அமைதியான ஆளு. என்னுடைய வேலையைத் தவிர மத்தவர்களின் வேலையில் மூக்கை நுழைக்கமாட்டேன். என்னுடைய டைரக்டரிடம்தான் ஒவ்வொரு சீன் பற்றியும் கன்சல்ட் பண்ணுவேன். ‘உனக்கு என்னுடன் என்னய்யா பிரச்னைன்னு கேக்கலாம்னு பொன் பண்ணினால் போனை எடுப்பதில்லை” என்கிறது மலர் பொண்ணு!
டாக்டருக்கு படிச்சவங்க பொய் சொல்லுவாங்களா?