சாக்லேட் கிடைத்த மகிழ்ச்சியில் குழந்தைகள் குதூகலிக்குமே அத்தகைய பேரானந்தத்தில் இருக்கிறார் ஷாக்சி அகர்வால்.! முகத்தில் அவ்வளவு பெருமை!
“ஜூன் 7-ம் தேதி ‘காலா ‘ ரிலீஸ். ரஜினி சார் பக்கத்தில நிக்கிறதுக்கே கொடுத்து வெச்சிருக்கணும் .நான் அவருடைய படத்திலேயே நடிச்சிருக்கேன்.கிடைச்ச வாய்ப்பை நல்லா பயன்படுத்திருக்கேன்.உலகம் முழுக்க எதிர்பார்க்கிற படத்தில நானும் இருக்கேன்.”என்று சிலிர்த்துக் கொள்கிறார்.
“அடேங்கப்பா அவ்வளவு சந்தோஷமா”
“பின்னே இருக்காதா, இது மட்டுமில்ல சார்! நான் நடிச்சிருக்கிற மலையாளப் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ். விமர்சகர்கள் பாராட்டித் தள்ளுறாங்க. ‘காலா’ படம் ரிலீசான பிறகு பெரிய அறிவிப்புகள் வரும்னு எதிர்பார்க்கிறேன்.மலையாளம்,தமிழ் படங்களில் நடிக்கிறதுக்கு பேசிட்டுப் போய் இருக்காங்க.”
“இப்ப நீங்க ரொம்பவும் அழகா இருக்கிங்க. வெளியே போறதுக்கு பயமா இல்லியா?”
“எனக்கெதுக்கு பயம்? நான் ஏன் பயப்படனும்?”
“நல்லா கேட்கிறேம்மா கேள்வி?…ஊருக்குள்ள நாலு வயசு குழந்தைன்னு கூட பார்க்காம தூக்கிட்டு போய் கொன்னுடராய்ங்க?”
“எனக்கு அந்த பயம் இல்லிங்க. சென்னையில் எனக்கு பாதுகாப்பு சக நடிகர்கள்தான்! பாதுகாப்பான சிட்டி! நானும் அந்த மாதிரியான இடங்களுக்கு போறதில்ல.!”
“இந்த மாதிரி கோரமான ரேப் அண்ட் மர்டருக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?”
“பொதுவா இந்தியான்னா பெண்களுக்கு மிகவும் மரியாதை கொடுக்கிற நாடுன்னுதான் சொல்வாங்க. நமக்கு ‘மதர் இந்தியா’.இப்ப அப்படி சொல்ல முடியலியே! . மாறிப்போச்சு! டெய்லி படிக்கிற ரிப்போர்ட்ஸ் தப்பாவே இருக்கு!அரசாங்கமும் சரியான நடவடிக்கை எடுக்கல.வேலை இல்லாத் திண்டாட்டம், வறுமை ,படிச்சிட்டு வேலைக்கு அலையிறவங்களுக்கு சரியான வழிகாட்டல் இல்ல.! இப்படி நிறைய இருக்கு!”
“கற்பழிப்புக்கு மரணதண்டனைன்னு சட்டம் வரப்போகுதே?”
“12 வயசு வரை உள்ளவங்களை கற்பழிச்சா மரணதண்டனை.அப்படின்னா 12 வயசுக்கு மேல உள்ள பொண்ணை ரேப் பண்ணா என்ன தண்டனை? ரேப் பண்ணபோறவன் வயசப் பார்த்தா வருவான்?என்ன கண்றாவிங்க! சரியான சட்டமா இல்ல.”
“சரோஜ்கான்னு பெரிய டான்ஸ் மாஸ்டர் வாய்ப்புக்காக படுக்கைய பங்கு போடுறது தப்பு இல்லன்னு சொல்லி இருக்காங்க.?”
“பெரிய டான்ஸ் மாஸ்டர் னா அப்படி சொல்லலாமா? அப்படிப்பட்டவங்க நல்ல ரோல் மாடலா இருக்க முடியாது “என்கிறார் ஷாக்சி அகர்வால்.
துணிச்சலான பொண்ணு!