தயாரிப்பாளர் முருகனின் படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ தடைகள் தாண்டி ஓடுகிற ‘ஹர்டில்ஸ்’மாதிரி படமும் சிக்கல்களை கடந்து ‘மே’ மாதம் வெளிவர இருக்கிறது. ”திருச்சி பரதன் பிக்சர்ஸ் விஸ்வநாதன்,அரவிந்த்சாமி இருவரும் உதவி செய்திருக்காவிட்டால் இந்த படம் வெளியே வந்திருக்காது. ஐயா விஸ்வநாதன் பாதம் தொட்டு வணங்குகிறேன் “என நெக்குருகினார் முருகன்.
அந்த அளவுக்கு இடையூறுகள்.! முருகன் என்றாலே சோதனைதானா? வசனகர்த்தா ரமேஷ்கண்ணா, நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் ஆகிய இருவரும் முருகன் சொன்னதையே சொன்னார்கள்.
பன்முக நடிகர் அரவிந்தசாமியும் அன்று மனம் விட்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார்.
“பாஸ்கர் ஒரு ராஸ்கலின் அனுபவம் எப்படி இருந்தது? தயாரிப்பாளர் முருகன் மனம் கசிகிறாரே?”
“இப்பல்லாம் படம் எடுக்கிறத விட ரிலீஸ் பண்றதுதான் கஷ்டம்!பெரிய காரியம்.! இருக்கிற சொத்தை எல்லாம் மொத்தமா போட்டுத்தான் பணம் எடுக்கிறாங்க. நான் செய்தத பெரிசா நினைக்கல! நான் டைமுக்கு வந்து திறமையா நடிச்சுக்கொடுத்தேன்.நடிச்சதுக்கு எவ்வளவு சம்பளமோ அதத்தான் வாங்கினேன்.மீறி எந்த செலவும் வைப்பதில்ல.எல்லோரும் இத பின்பற்றினால் நல்லா இருக்கும்.”
“பொதுவா பணம் பாக்கி இருந்தால் டப்பிங் கூட சிலர் பேசமாட்டாங்க. அரவிந்தசாமின்னா பாக்கி வைக்கலாம்கிற மனப்பான்மை வளர்ந்திட்டா என்ன பண்ணுவீங்க?”
“அவங்க நிலைமையையும் பார்த்துத்தானே முடிவு செய்ய முடியும்.! 14 வருச இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்தவன். வாய்ப்பு கிடைச்சிருக்கு நடிக்கிறேன்.காரணம் ரசிகர்களின் வரவேற்பு .இதில் எனக்கு சோலோ ஹீரோ வேணும்னோ,மத்த ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன்னோ சொல்ல மாட்டேன். எனக்கு நல்ல வேஷம் கிடைச்சா போதும்.!”
“ரஜினியை வைத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் வில்லன் வேடம் கிடைத்தால் நடிப்பீர்களா?!”
“கேரக்டர் பொருத்தமாக இருக்கணுமே?”
“பேசுவதில் மிகவும் அமைதியாக காணப்படுகிற நீங்கள் டுவிட்டரில் பொங்குகிறீர்களே ?”
“அப்போதும் அமைதியாகத்தான் இருப்பேன். காமன்மேனாக இருந்து பிரதிபலிக்கவேண்டிய கடமை இருக்கிறதே?”
“கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?”
“கடவுள் நம்பிக்கை இருக்கிறதான்னு சொல்ல முடியல. இல்லன்னு சொல்லவும் முடியல. கோவிலுக்குப் போவேன். சாமி கிட்ட கை கட்டி நிப்பேன். எப்படி பிரே பண்றது என்ன கேட்கிறதுன்னு தெரியாது.” என்கிறார் அரவிந்த சாமி.