’சகாப்தம்’ படத்திற்காக லங்காவியிலும் அதன் சுற்றியுள்ள மலை மற்றும் கடல் பகுதிகளிலும் ஒரு டூயட் பாடல் சுமார் 50 இலட்சம் பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளது. இதற்கு நடன மாஸ்டர் நோபல் நடனம் அமைத்தார். இப்பாடல் காட்சியில் நாயகன் சண்முகபாண்டியனும், நாயகி சுப்ரா ஐய்யப்பாவும் நடனம் ஆடியுள்ளார்கள்.
இந்த ஒரே பாடலில் மட்டும் நாயகனுக்கு 50 காஸ்ட்டியுமும், நாயகிக்கு 50 காஸ்ட்டியுமும் பயன்படுத்தியுள்ளனர். இப்பாடல் காட்சிகளை இதுவரை யாரும் படம்பிடிக்காத பகுதிகளில் படம்பிடித்துள்ளார்கள். இதற்க்காக இப்படக்குழு காலை 4 மணிக்கு கிளம்பி சுமார் 5 மணிநேரம் பயணம் செய்து லொகேஷனை அடைந்தார்களாம். இப்பாடல் நான்கு நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சிறப்பாக வந்துள்ளதாம்.