விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்திருக்கும் ‘இரும்புத்திரை’ திரைப்படம், சினிமா ஸ்டிரைக்குக்கு முன்பே ரிலீஸுக்கு தயாரானது. மற்ற திரைப்படங்களின் வெளியீட்டுக்கு வழிவிடும் விதமாக ரிலீஸ் மார்ச் மாதத்தில் வெளியாகும் எனக் கூறப்பட்டது. அதற்குப் பிறகு ஸ்ட்ரைக் தொடங்கியதால் எந்தப் படங்களுமே கடந்த வாரம் வரை வெளியாகவில்லை.ஸ்டிரைக் முடிந்ததும் ‘இரும்புத்திரை’ வெளியாகும் எனக் கருதப்பட்ட நிலையில், மே 11-ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தேதியில் ‘இரும்புத்திரை’ திரைப்படம் ரிலீஸ் ஆகாது என விஷால் மறுத்திருந்தார்.மேலும்,இரும்புத்திரை’ பட வெளியீட்டு தேதியில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை தீர்க்கவேண்டியது எனது கடமை என்றும், படத்தை வாங்கியவர்கள் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியின் அனுமதியின்றி ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டதாகவும் கூறியிருந்தார் .இந்நிலையில்,விஷால் நடித்து தயாரித்த இரும்புத்திரை படத்தை மே 11 ம தேதி வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கத்தில்,அமைக்கப்பட்டுள்ள திரைப்பட வெளியீட்டு ஒழுங்கு படுத்தும் குழு அனுமதி வழங்கியுள்ளது.இது குறித்து விஷாலுக்கு சங்கத்தின் கவுரவ செயலாளர் எஸ்.எஸ். துரை ராஜ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, ‘தங்களது ஏப்ரல் 22 ம் தேதியிட்ட கடிதம் கிடைக்கப்பெற்றோம்.அது தங்களது தயாரிப்பில் உருவாகியுள்ள இரும்புத்திரை படத்தினை 11-5-2018 அன்று வெளியிட ஒப்புதல் கேட்டு கடிதம் கொடுத்துள்ளீர்கள் மேற்கண்ட கடிதத்தினை எங்களது தயாரிப்பாளர்கள் சங்கத்தில்,அமைக்கப்பட்டுள்ள திரைப்பட வெளியீட்டு ஒழுங்கு படுத்தும் குழு வில் வைத்து பரிசீலனை செய்து தாங்கள் குறிப்பிட்டுள்ள மே 11 ம தேதி அன்று தங்களது இரும்புத்திரை திரைபடத்தினை வெளியிட குழு ஒப்புதல் அளிக்கிறது என்பதை தங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.